Uncategorized
திருமணமாகி 4வருடம் ஆன நிலையில்’… “கணவருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம்”…. மகள், தந்தை என அடுத்தடுத்து நடந்த பரிதாபம்.

கடலூர் அருகில் உள்ள கண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாவாடைசாமி இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். தன் மகளுக்கும் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த நான்கு வருடத்த்திற்கு முன்னர் திருமணமானது.
திருமணமான ஆண்டு முதல் இன்று வரை வரதட்சணை கேட்டு ராஜேஷ் மற்றும் அவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கொடுமைகள் செய்துவந்தனர். தொடர் கொடுமைகளை பொறுத்து கொள்ளமுடியாமல் ஒரு கட்டத்தில் சங்கீதா தன் அப்பாவீட்டிற்கு வந்துவிட்டார்.
பின்னர் இருவரும் விவாகரத்து கேட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் தற்போது ராஜேஷுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த தகவலை கேள்விப்பட்ட சங்கீதா அதிர்ச்சியடைந்து தற்கொலை செய்துகொண்டார் ஆத்தரத்தில் சங்கீதாவின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார்.
சங்கீதா உறவினர்கள் ராஜேஷ் மற்றும் அவரின் குடுமபதரின் மேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் புகாரின் அடிப்படியில் வழக்கு பதிந்துள்ளனர்.