மனைவியின் தலையை வெட்டி நடுரோட்டில் கொண்டு சென்ற கணவர்… ” ஜனகனமன ” தேசியகீதம் பாடியதால் திக்குமுக்காடிய போலீசார்கள் … - cinefeeds
Connect with us

Uncategorized

மனைவியின் தலையை வெட்டி நடுரோட்டில் கொண்டு சென்ற கணவர்… ” ஜனகனமன ” தேசியகீதம் பாடியதால் திக்குமுக்காடிய போலீசார்கள் …

Published

on

இந்தியா , லக்னோ, உத்தர பிரதேசம் மாநிலம் பரபங்கி மாவட்டம் பஹதுர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலேஷ் 30 மற்றும் ரஜினி 25 . இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது உடல் நிலை சரியில்லாமல் இரண்டு வருடத்திற்கு முன் இறந்து விட்டது .அப்பொழுது முதல் வீட்டில் தம்பதியர்களுக்கு சண்டை வரும். இருவரும் சண்டை போட்டு கொள்வனராம். அப்படி தான் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலையில் இருவரும் வீட்டில் சண்டை போட்டு கொண்டனர்.

கோபம் தலைக்கு ஏறியதால் ஆத்திரத்தில் மனைவி ரஜினியை கணவர் அகிலேஷ் வீட்டை விட்டு வெளியே தள்ளி அடிக்க துவங்கினர். அப்படியும் கோபம் அடங்கவில்லை மேலும் வீட்டில் இருந்த அரிவாளை கொண்டு வந்து ரஜினியை சரமாரியாக குத்தினார். மேலும் ரஜினி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் . அவர் இறந்ததை அடுத்து அவர் அருகில் அமர்ந்து அரிவாளால் அவரின் தலையை வெட்டி எடுத்து முண்டத்தை வீட்டு வாசலிலேயே போட்டு விட்டு தலையை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார் .

Advertisement

கணவர் அகிலேஷ் தன் மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக நடு தெருவில் காவல் நிலையத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார். திட்டத்திட்ட ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றார். அவர் போகும் வழி எல்லாம் ரத்தம் கசிந்து கொண்டு இருந்தது . இதனை பார்த்த மக்கள் பயந்துஅடித்து ஓடினர். சிலர் அதனை கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவர் வரும் வழியில் அவரை மடக்கி பிடித்த போலீசார் அவர் கையில் இருக்கும் முண்டத்தை வாங்க முயற்சிக்கையில் அகிலேஷ் தீடிர் என்று யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நமது தேசிய கீதமான ஜனகனமன என்று பாட ஆரமித்துவிட்டார் .

இதனால் செய்வதற்கு அறியாது போலீசார் ஒரு நிமிடம் திகைத்தனர். பிறகு அவரை பிடித்து விட்டனர். மேலும் வீட்டில் வெளியில் இருந்த முண்டத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அகிலேஷ் கைது செய்ய பட்டு தற்பொழுது விசாரணையில் உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in