மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..! விடுதி உணவுப்படியை அதிரடியாக உயர்த்திய அமைச்சர் வன்னி அரசு .. எவ்வளவு தெரியுமா..? முழு விவரம் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..! விடுதி உணவுப்படியை அதிரடியாக உயர்த்திய அமைச்சர் வன்னி அரசு .. எவ்வளவு தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!

Published

on

சமூக நீதித்துறை விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர உணவுப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி, பள்ளி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப்படி ₹1,400-லிருந்து ₹1,800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான மாதாந்திர உணவுப்படி ₹1,500-லிருந்து ₹2,000 ஆக உயர்த்தப்பட்டு நடப்பு நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்துவதற்கும், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாணவர்களுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த உணவுப்படி உயர்வு பெரிதும் உதவும் என அமைச்சர் வன்னி அரசு தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in