Uncategorized
வேறு சமுதாயத்தை சேர்ந்த இளைஞ்சர் …. மகளின் காதல் விவகாரம்… குடும்பத்தையே கழுத்தை அறுத்து கொன்ற police constable ….பரபரப்பு சம்பவம் …

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரிஜேஷ் திவாரி என்பவர் சிறப்பு கிளையில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார்.
ரிங்கே தேவி என்கிற மனைவி, குஷ்பூ என்கிற மகளும் ஒரு மகனும் இருக்கிறார். அவர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர். மது பழக்கத்தால் அவர் மனவிடையே தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதன் இடையில் மகள் குஷ்பு வேறு ஒரு சமுதாயத்தை சேர்ந்தவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
அதனால் மனவேதனையில் பிரிஜேஷ் மது அருந்திவிட்டு வீட்டில் அடிக்கடி சண்டை போடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று விடியற் காலையிலேயே போதையில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து உள்ளார் மனைவியுடன் அப்பொழுது ஏற்பட்ட தகராறில் அவர் தனது மனைவி மற்றும் மகன் , மகள் அனைவரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் விஷம் அருந்தியுள்ளார்.
மேலும் பிரிஜேஷ் அவரது தங்கைக்கு கால் செய்து நான் என்குடும்பத்தை கத்தியால் கொலை செய்துவிட்டேன் மேலும் நானும் விஷம் அருந்தி விட்டேன் என்று சொல்லி தொலைபேசியை துண்டித்து விட்டார். இந்த விஷயத்தை கேட்ட பிரிஜேஷ் தங்கை உடனடியாக அவர் இருக்கும் வீட்டின் உரிமையாளரிடம் சென்று நடந்ததை கூறி அவருடன் அண்ணன் பிரிஜேஷ் இருக்கும் வீட்டிற்கு வந்துவுள்ளார் உள்பக்கம் தாழ்ப்பாள் போட்ட நிலையில் இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் பிரிஜேஷ் மயங்கிய நிலையில் ஒரு அறையில் கிடந்தார் அவர் அருகில் விஷ பாட்டில் இருந்தது.
மேலும் அடுத்த அறையில் மனைவி , மகள் மற்றும் மகன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டு இருந்த பிரிஜேஷ் தற்பொழுது கவலை கிடமாக உள்ளார் என்று தெரிவிக்க பட்டது.