LATEST NEWS
“உங்க ராசிக்கு கடலை பார்த்தபடி” ஜோதிடர் சொன்ன அந்த ஒரு வார்த்தை… பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட அடம்பிடிக்கும் CM விஜய்..? பின்னணியில் இருக்கும் விஷயம்..!!
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் நிலம் தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. தற்போதைய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் ராசி குறியீடு ‘நண்டு’ (கடகம்) என்பதால், அவரது ஜோதிட ஆலோசகரான ரிக்கி ராதன் பண்டிட் கடற்கரைக்கு அருகில் கடலைப் பார்த்தவாறு முதலமைச்சர் அலுவலகத்தை அமைப்பது நீண்ட கால ஆட்சிக்குச் சாதகமாக இருக்கும் என ஆலோசனை வழங்கியதாக அரசியல் வட்டாரங்களில் சில தகவல்கள் உலா வருகின்றன. எனினும், இந்த ஜோதிட ஆலோசனைகளுக்கும் அரசின் அதிகாரப்பூர்வ திட்ட முடிவுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை.
இந்தத் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கத்தின் 26.36 ஏக்கர் நிலப்பரப்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு புதிய செயலகம் கட்டப்பட்டால், அருகிலுள்ள ஒன்பது மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், பாதுகாப்பு காரணங்களால் கடற்கரையில் படகுகளை நிறுத்தவோ, வலைகளை உலர்த்தவோ முடியாது என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டிப் போராடி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் 19 பள்ளிகள் இயங்குவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சில கூட்டணிக் கட்சிகளும் இத்திட்டத்திற்குத் தங்கள் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இந்த நிலத்தை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக வகை மாற்றம் செய்ய அனுமதி அளித்துள்ளதால், இத்திட்டத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதில் தவெக அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
