CINEMA
ராசியில்லாத மியூசிக் டைரக்டர்னு சொன்னாங்க…. நா என்ன பண்ண முடியும்…. யுவன் ஷங்கர் ராஜா ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தனது தந்தை இளையராஜா போலவே இசையில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் பல்வேறு சிறந்த படங்களுக்கு இசையமைத்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இவர் இசைக்காக இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றன.
இவர் முதன்முதலில் அரவிந்தன் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய நிலையில் தற்போது முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் படங்களுக்கு சிறந்த தீம் மியூசிக் போட்டு அசத்தியுள்ளார். சமீபத்தில் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “பூவெல்லாம் கேட்டுப்பார்” படத்திற்குப் பின் கிட்டத்தட்ட 3 வருஷமா நான் எந்தப் படத்திற்கும் இசை அமைக்கல. காரணம் என்னை ராசியில்லாத இசையமைப்பாளர்னு சொன்னாங்க. எனக்கு கஷ்டமா இருந்துச்சி. பாட்டு எல்லாமே ஹிட், ஆனால் படம் ஓடல. அதுக்கு நான் என்ன செய்யமுடியும் என அழுதிருக்கேன் என்று கூறியுள்ளார்.