பிக் பாஸ் சீசன் 7-ல் நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் கலந்து கொள்கிறாரா?… அடி தூள் தான் போங்க… - Cinefeeds
Connect with us

CINEMA

பிக் பாஸ் சீசன் 7-ல் நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் கலந்து கொள்கிறாரா?… அடி தூள் தான் போங்க… 

Published

on

விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக பிக்பாஸ் 7வது சீசன் தொடங்க இருக்கிறது. செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் 2வது வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கலாம் என்கின்றனர். இப்போதைக்கு நிகழ்ச்சி விரைவில் வருகிறது, காத்திருங்கள் என சூப்பரான புரொமோக்கள் வெளியாகி வருகின்றன.

இரண்டு வீடு இந்த முறை புதியதாக வருகிறது அதோடு வேறென்ன விஷயங்கள் புதியதாக வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 6வது சீசனிற்கு ரூ. 70 கோடி வரை சம்பளம் வாங்கி கமல்ஹாசன் இந்த முறை ரூ. 130 கோடிக்கு சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே பிக்பாஸ் 7வது படு பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது இந்த சீசனில் பங்குபெறவுள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் என நிறைய பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால் யார் உறுதியாக வருவார்கள் என தெரியவில்லை.

இந்த நேரத்தில் தான் நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான நடிகை ஸ்ரீதேவி பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தேவதையை கண்டேன், தித்திக்குதே போன்ற படங்களில் நடித்து 90ஸ் கிட்ஸ்களின் மனதில் இடம் பிடித்தவர்.இப்படியொரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வர நடிகையின் தரப்பில் எந்த ஒரு மறுப்பும் இதுவரை வரவில்லை. தற்பொழுது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.