‘நேரம் வரும்போது எல்லாமே தானா நடக்கும்’… திருமணம் மற்றும் நடிகர் பிரபாஸ் பற்றி நடிகை அனுஸ்கா ஓபன் டாக்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘நேரம் வரும்போது எல்லாமே தானா நடக்கும்’… திருமணம் மற்றும் நடிகர் பிரபாஸ் பற்றி நடிகை அனுஸ்கா ஓபன் டாக்…

Published

on

இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இரண்டு திரைப்படம் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பை தரவில்லை. இதனால் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் ‘அருந்ததி’ திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார்.

இதனை அடுத்து விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த இவருக்கு அதன்பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது. விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் அனுஷ்கா.

Advertisement

இதனிடையே இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படம் இந்திய அளவில் பெரும் சாதனை படைத்து இவருக்கும் வெற்றியை தேடித்தந்தது.  தற்பொழுது இவர் ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள நிலையில், அவரது அனுஷ்காவின் 48வது படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொண்ட அனுஷ்கா, திருமணம் மற்றும் நடிகர் பிரபாஸ் குறித்துகேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நடிகர் பிரபாஸுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு அனுஷ்கா இதற்கான முடிவு என் கையில் இல்லை என்று  தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து 41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது பற்றி கேட்ட போது,  ‘உரிய நேரத்தில் நடக்க வேண்டியது நடக்கும். அதற்கான நேரம் இருக்கிறது அப்போது அது தானாகவே நடக்கும்’ என பதில் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement