CINEMA
‘எப்படி பாத்தாலும் நீங்க அழகு தான்’… வித்தியாசமான லுக்கில் புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை பவித்ரா ஜனனி…

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் பவித்ரா ஜனனி. இவர் விஜய் டிவியின் ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
அந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி மற்றும் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
இதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் மீண்டும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் வினோத் பாபு நாயகனாக நடித்த பவித்ரா ஜனனி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை அவ்வப்பொழுது பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
தற்பொழுது இவர் வித்தியாசமான லுக்கில் பல்வேறு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்க எப்படி பாத்தாலும் அழகு தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.