LATEST NEWS
நடிகர் விஜய் பயன்படுத்தும் விக் இத்தனை லட்சமா?…. புகைப்படத்தை போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…. பதிலடி கொடுக்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று டிசம்பர் 24ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு ஏற்பாடுகள் பலமாக நடைபெறும் நிலையில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பங்கேற்பாளர்களுக்கு நுழைவு பாஸ் வழங்கப்பட இருக்கிறது.
இதனிடையே நடிகர் விஜய் விக் அணிந்து கொண்டு பல இடங்களுக்கு செல்கிறார் என்ற சர்ச்சை தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. அதனை வைத்து நெட்டிசன்கள் பலரும் விஜயை தொடர்ந்து கலாய்த்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அவர் பயன்படுத்தும் விக் 10 லட்சம் என்று கூறியுள்ளனர். இதனைப் பார்த்த விஜயின் ரசிகர்கள் பலரும் அந்த நெட்டிசன்களுக்கு பிடித்த நடிகரை கலாய்த்து எதிர் மீம் போட்டு வருகிறார்கள். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
The WIG used by Vijay costs 10 lakhs.#Thunivu #AjithKumar pic.twitter.com/47PxL1TtAM
— Bindra RD ツ (@Bindra_Off) December 24, 2022