“என் மருமகள் வீட்டுல இப்படித்தான் இருப்பா”…. முதன்முறையாக மனம் திறந்த நயன்தாராவின் மாமியார்…. வைரல் வீடியோ….!!!! - cinefeeds
Connect with us

VIDEOS

“என் மருமகள் வீட்டுல இப்படித்தான் இருப்பா”…. முதன்முறையாக மனம் திறந்த நயன்தாராவின் மாமியார்…. வைரல் வீடியோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா. தற்போது ஜவான் மற்றும் கனெக்ட், இறைவன் மற்றும் நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி மற்றும் அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தற்போது இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணமுடிந்து இருவரும் வெளிநாடுகளில் ஹனிமூன் சென்ற நிலையில் பல புகைப்படங்களையும் அவ்வபோது இணையத்தில் பகிர்ந்தனர். அதே சமயம்சமீபத்தில் வாடகை தாய் மூலமாக இரட்டைக் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

Advertisement

பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப வாடகை குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்த நிலையில் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நயன்தாராவின் மாமியார் மீனாகுமாரி தனது மருமகள் குறித்த முதன்முறையாக மனம் திறந்து பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in