ரொம்ப கஷ்டம் சார்…. உங்களுக்கு இந்த ஜென்மத்துல திருமணம் நடக்குமா?…. நடிகர் விஷாலை கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ரொம்ப கஷ்டம் சார்…. உங்களுக்கு இந்த ஜென்மத்துல திருமணம் நடக்குமா?…. நடிகர் விஷாலை கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான லத்தி திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனிடையே 45 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இருந்தாலும் நான் காதல் திருமணம் மட்டும் தான் செய்வேன் என்று பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் எப்போது திருமணம் என்று அவரிடம் கேட்டால் தெலுங்கு நடிகர் பிரபாஸ் முதலில் திருமணம் செய்யட்டும் அதற்குப் பிறகு நான் திருமணம் செய்து கொள்கிறேன் என பேட்டியில் கூறினார். இந்நிலையில் நடிகர் பிரபாஸிடம் உங்களின் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு, கட்டாயம் திருமணம் செய்வேன், ஆனால் அதை எப்போ என எனக்கே தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் விஷாலின் திருமண இந்த ஜென்மத்தில் நடைபெறுமா என்று நெட்டிசன்கள் பலரும் கிண்டல் அடித்து இந்த செய்தியை வைரலாகி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in