LATEST NEWS
முதன்முறையாக அமெரிக்காவில் உலகநாயகன் கமலஹாசனின் துணிக்கடை… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் & வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. கமலஹாசன் நடிகராக மட்டுமே மக்கள் நீதி மையம் என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார். மேலும் சினிமா சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகளிலும் கமலஹாசன் அவ்வப்போது பங்கெடுத்து வருகிறார்.
கலாச்சாரம், காந்தியம், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட களங்களில் நடக்கும் மாநாடு கருத்தரங்களில் அவ்வப்பொழுது கலந்து கொண்டு வருகிறார். மகாத்மா காந்தியின் தீவிர பின்பற்றாளரான உலகநாயகன் கமலஹாசன் கதர் ஆடைகளை அணிந்து கதர் ஆடை குறித்து விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தி வருபவர்.
நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கதருக்காக புது நிறுவனம் ஒன்றை தொடங்கியிருப்பதாக கூறி அதன் பெயரையும் லோகாவையும் அறிமுகப்படுத்தியிருந்தார். . KH – House of Khaddar என தன் நிறுவனத்தின் பெயரை கமல்ஹாசன் அறிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக காஞ்சிபுரம் சென்ற போது இந்த எண்ணம் தோன்றியதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது நடிகர் கமலஹாசன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் புதிதாக KH – House of Khaddar நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….
View this post on Instagram