ரணகளத்திலும் ஒரு குதூகலம்……! நயன்-விக்கிக்கு நடிகர் கார்த்திக் செய்த விஷயம்….. வைரல் புகைப்படம்…..!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ரணகளத்திலும் ஒரு குதூகலம்……! நயன்-விக்கிக்கு நடிகர் கார்த்திக் செய்த விஷயம்….. வைரல் புகைப்படம்…..!!!

Published

on

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இருவரும் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அரங்கேறியது. திருமணத்திற்கு பிறகு கோவில், கேரளா மற்றும் தாய்லாந்து, பாசிலோனியா உள்ள இடத்திற்கு சுற்றித்திரிந்த இந்த ஜோடிகள். அங்கிருந்து எடுக்கப்படும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தனர்.

 

Advertisement

இதை பார்த்த ரசிகர்கள் ரொம்ப ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கீங்க, என்று கூறிவந்த நிலையில். யாரும் எதிர்பார்க்காகாத வகையில், விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் இரட்டை குழந்தைகளுடன்,நயன்தாராவும் விக்னேஷ்சிவனும்  இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நானும் நயன்தாராவும் அப்பா அம்மா ஆகி விட்டோம் என்று தெரிவித்திருந்தார். இதை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அது எப்படி நயன்தாரா கர்ப்பமாகவே இல்லையே, எப்படி குழந்தை பெற்றார்?

ஒருவேளை வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று எடுத்துக் கொண்டனர் என்று கூறிவந்தனர். அது மட்டும் இல்லாமல் திருமணம் ஆகி 5 மாதங்கள் ஆன நிலையில். எப்படி குழந்தை பெற்றுக் கொண்டனர். ஒருவேளை திருமணத்திற்கு முன்பாகவே இதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டனர், என்று பலரும் பலவித கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த கேள்விகளுக்கு எதுவும் அவர்கள் தரப்பிலிருந்து பதில் வரவில்லை.

Advertisement

ஒரு சிலர் இப்படி கேள்வி எழுப்பி வந்தாலும். இருவருக்கும் ஒரு சிலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்திக், விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடிக்கு வாழ்த்து அனுப்பியுள்ளார்.  அதில் “Welcome to Parenthood. God Bless you Four” என்று குறிப்பிட்டுள்ளார். அதை போட்டோ எடுத்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in