CINEMA
பிறந்தநாள் ஸ்பெஷலாக ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக….. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…!!

மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். கடந்த 2000 ஆண்டு வெளியான பைலட்ஸ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கீதாஞ்சலி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். முதலில் மலையாளத்தில் நடித்து வந்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இது என்ன மாயம் என்ற திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமான இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
தற்போது தமிழ் சினிமாவில் ஒரு உச்ச பட்ச நடிகையாக ஜொலித்து வருகிறார். பொன்னியின் செல்வன்-2, ரகு தாத்தா, சாணி காகிதம், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கருப்பு உடையில் எடுத்த புகைப்படம் வசீகரிக்கும் அழகில் உள்ளது. மேலும் இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram