LATEST NEWS
பகீர் சம்பவம்..! யார் அந்த ‘மர்ம நபர்’..? பட்டப்பகலில் லஷ்கர் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை… வைரலாகும் பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தைபாவின் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான இம்ரான் என்பவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்ததாகக் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் அந்த வீடியோ காட்சியில், ஒரு கட்டிடத்தின் வாயிலில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஒருவர் வெளியே வருகிறார். அப்போது வெள்ளை நிற ஆடை அணிந்த நபர் ஒருவர் அவரை நெருங்கித் துப்பாக்கியால் சுடுகிறார். துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க முயலும்போது இருசக்கர வாகன ஓட்டி கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுகிறார்; உடனே அந்தத் துப்பாக்கிதாரி அவரிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகளையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறார்.
இந்த வீடியோவில் அக்டோபர் 13, 2026 (காலை 11:54 மணி) என்ற தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், சுடப்பட்ட நபர் யார், இந்தச் சம்பவம் எங்கு நடந்தது மற்றும் இதன் பின்னணி என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களோ அல்லது பாகிஸ்தான் அரசின் உறுதிப்படுத்தலோ இதுவரை வெளியாகவில்லை.
