LATEST NEWS
பட்ஜெட்டை தாண்டிய வேட்டையன், இந்தியன் 2, விடாமுயற்சி படங்கள்.. லைகா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..? அதிர்ச்சியில் படக்குழுவினர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார். பல வருடங்கள் கழித்து ரஜினியுடன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாள நடிகர் பகத் பாசில், பாகுபலி பட வில்லன் ராணா டகுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இதனையடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்குனர் சங்கர் இயக்குகிறார். இந்த படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். ஏற்கனவே லைக்காவுக்கும் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படபிடிப்பு போனது.
தற்போது இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தையும் சேர்த்தே படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. அடுத்ததாக ரசிகர்களால் தல என அன்புடன் அழைக்கப்படும் அஜித் லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அர்ஜுன், த்ரிஷா ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் லைக்கா நிறுவனம் ஒரு அதிரடியான முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகிறது. அதாவது வேட்டையன், இந்தியன் 2, விடாமுயற்சி போன்ற படங்களுக்கு ஏற்கனவே குறிப்பிட்ட தொகையை விட அதிக பட்ஜெட் செலவானதாக தெரிகிறது. இதனால் லைகா நிறுவனம் உச்ச நடிகர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்க முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆ்த்தியுள்ளது.