CINEMA
அந்த ஹீரோவுக்கு தம்பியா…? என்னால நடிக்க முடியாது…. விலகிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தில் ஸ்ருதி, சத்யராஜ் ஆகியோர் நடிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் ஸ்ருதிஹாசன், பகத்பாசில், துஷாரா விஜயன், சத்யராஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாக சமீபத்தில் போஸ்டர் வெளியானது. அடுத்ததாக விஜய் நடிப்பில் தளபதி 69 படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தில் SK விற்கு தம்பியாக லோகேஷ் கனகராஜ் நடிக்க இருந்தாராம். ஆனால் அவருக்கு தம்பியாக என்னால் நடிக்க முடியாது என்று லோகேஷ் விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.