CINEMA
கங்குவாவை 100 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன் ஆனால்… பாடலாசிரியர் மதன் கார்கி சொன்ன விஷயம்…!!
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கங்குவா’. 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். படம் நவ.14ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி படம் குறித்து பேசுகையில், கங்குவா படத்தின் ஒவ்வொரு சீனையும் 100 முறைக்குமேல் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், அதன் தாக்கம் அதிகரித்தபடி உள்ளது. இப்படத்தை மிகச்சிறந்த படைப்பாக மாற்றியுள்ளதாக புகழ்ந்துள்ளார்.