LATEST NEWS
மேடம் நீங்க அந்த மாதிரியா?…. ரசிகரின் கேள்விக்கு அப்படி ஒரு பதில் கூறி…. வாயடைக்க வைத்த நடிகை யாஷிகா….!!!!

தமிழ் சினிமாவில் துருவங்கள் 16 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் தொடர்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால் அந்நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இன்றைய இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவர் அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோ செய்ய தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
சமீபத்தில் யாஷிகா தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடிய போது ஒருவர் நீங்க virgin- ஆ? என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு யாஷிகா, இல்லை நான் ஏர்டெல் என பதில் கூறியுள்ளார். Virginஎன்ற ஒரு மொபைல் நெட்வொர்க் வெளிநாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் அதைப்பற்றி குறிப்பிட்டு தான் இப்படி ரசிகரின் மூக்கை உடைத்து உள்ளார் யாஷிகா.