Uncategorized
எப்பவும் செய்யற மாதிரி ‘கை, காலை டேப் வைச்சு சுத்தி…!’.. ராட்சசன் பட பாணியில் கொடூர கொலை’… “மதுரையில் நடந்த பயங்கரம்”..?

திருட்டு பொருட்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்த வாட்சிமேனை கொடூர முறையில் கொலை செய்த திருடர்கள் மதுரையில் நடந்த பயங்கர சம்பவம்
மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை அருகே இருக்கும் சம்பகுடி கிராமத்தில் அழகுமணி என்பவரின் சொந்தமான 3 ஆடுகள், அடுத்தபடி முத்துமாரி என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகள் திருடு போனதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆடுகளின் வாயை பேக்கிங் டேப்பால் சுற்றப்பட்டு ஆட்டோவில் ஒருவர் எடுத்துச் செல்வதை கண்ட போலீசார் அதியடைந்தனர்.
பின்னர் அவரை மடக்கி விசாரணை செய்தனர். அதன் பின்னர் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பெயர் ராக்கெட் ஜெயபால் என்பது தெரியவந்தது மேலும் இவர் அப்பகுதியில் ஆடுகளை குறிவைத்து திருட்டு தொழில் செய்பவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் மேல் சந்தேகம் அதிகரித்தால் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசாருக்கு திடுக்கிடும் பல தகவல் கிடைத்து, அதில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு 2018ம் ஆண்டு வாட்சிமேன் நித்யானந்ததை நானும் என் நண்பரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது நண்பரான அப்பள பாண்டியன் என்பவருடன் சேர்ந்து அப்பகுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும், திருடிய ஆடுகளை மறைத்து வைக்க தனியார் பஸ் பாடிபில்டிங் கம்பெனிக்கு சென்றோம் அப்போது வட்சிமேன் நித்யானந்தம் எங்களுக்கு இடம் தர மறுத்தார்.
அதனால் வட்சிமேன் நித்யானந்தம் என்பவரை கொலை செய்தது பின்னர் தங்களது வழக்கமான பாணியில் பேக்கிங் டேப் ஒட்டி ஆட்டை அறுப்பது போன்று கொலை செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் கை, கால்கள் மற்றும் முகம் ‘பேக்கிங் டேப்’ மூலம் சுற்றப்பட்டு கொலை செய்த்தை ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் அப்பளப் பாண்டியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.