Uncategorized
கொரோனா’..! “காலர் ட்யூன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவை விழிப்புணர்வு செய்த குரல்”… ‘யார் என்று? ‘கண்டு பிடிக்கப்பட்டுள்ளது’..?

சீனாவில் கொடிய கொரோனா வைரஸால் தற்போது பலி எண்ணிக்கை 5 ஆயிரம் தாண்டியது இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள். மேலும் மக்களிடம் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு, செய்ய செல் போன் காலர் ட்யூனிகளிலும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 38 நொடிகள் வரும் இந்த விழிப்புணர்வு ஆடியோவுக்கு குரல் கொடுத்தவர் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து கேரள மாநிலம் எர்ணாகுளம் காந்தி நகர் பகுதியில் டெலிகிராம் ஸ்டோரில் ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிஸர்
ஸ்ரீப்ரியாவின் குரல் தான் தற்போது இந்தியா எங்கும் கேட்கும் கொரோனா காலர் ட்யூனின் குரல் ஆகும். இதற்கு முன்னதாக கேரளா BSNL-சேவையிலும் ஸ்ரீப்ரியா குரல் கொடுத்துள்ளார்.
தற்போது ஸ்ரீப்ரியாவின் குரல் BSNL மட்டுமல்லாது Jio, airtel உட்பட அனைத்து மொபைல் நெட்வொர்க்களிலும் ஒலித்து வருகின்றன. கொரோனா வைரஸ் பீதி இந்தியா முழுவதும் உள்ள நிலையில் கொரோனாவின் காலர் ட்யூனும் மூலம் புகழ் பெற்றவர் ஸ்ரீபிரியா என்பது குறிப்பிடத்தக்கது.