LATEST NEWS
திருமணமாகி 100வது நாளை கொண்டாடிய மகாலட்சுமி – ரவீந்தர் தம்பதி…. வைரலாகும் புகைப்படத்துடன் கூடிய பதிவு இதோ….!!!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார். மறுபக்கம் சீரியலில் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி போட்டோ சூட் நடத்தியும் பணம் சம்பாதித்து வருகிறார். இதனிடையே ரவீந்தர் தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் பல புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில் நேற்று மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு திருமணம் செய்து கொண்ட நூறாவது நாளை அவர் கொண்டாடியுள்ளார்.
கடந்த 37 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு நொடிப்பொழுதும் அக்கறையோடு, சண்டை, நகைச்சுவை மற்றும் அதிகப்படியான காதலோடு வாழ்கிறேன் அம்மு என அவர் ஒரு பதிவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
