CINEMA
தொடர்ந்து சிவப்பு கலர் டிரெஸ்ஸில் வரும் நடிகை மாளவிகா மோகனன்…. என்ன காரணம் தெரியுமா…??
விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன் நடித்தார். மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியையடுத்து பிரபல தமிழ் நடிகைகளுள் ஒருவராக இவர் உருவெடுத்துள்ளார். இந்த வரிசையில் இவர் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பா. ரஞ்சித் அவர்களால் இயக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி அன்று இந்த படம் வெளியாகிறது.
இந்த படத்தில் ஆர்த்தி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் சவால் ஆனது என்பதால் மிகவும் மெனக்கட்டுள்ளார். திரையில் அவர் காட்சியளிக்கும் அனைத்து காட்சிகளையும் சிகப்பு நிறமாகவே காட்டப்பட்டிருக்கிறது. அந்த சிகப்பு நிறத்தை பிரதிபலிக்கும் விதமாக தங்கலான் படம் சார்ந்த அனைத்து ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கும் சிவப்பு நிற புடவையில் தங்கமாய் ஜொலித்திருந்தார்.
மொத்தத்தில் இதுவரை பார்க்காத மாளவிகாவை தங்கலான் படத்தில் பார்க்கலாம். பொதுவாக நடிகைகள் படத்தின் கதாபாத்திரத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் மற்றும் தோற்றத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் விதமான ஆடைகளை பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வது வழக்கம். பாலிவுட் துறையில் பின்பற்றப்படுவது உண்டு. அந்த வகையில் மாளவிகா மோகனனும் அணிந்துள்ளார்.