CINEMA
அதற்காக நான் இங்கே “அம்மணமாக” கூட ஆட தயார்…. “கொட்டுக்காளி” பட விழாவில் பரபரப்பை கிளப்பிய மிஸ்கின்…!!!
அறிமுக இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் அடுத்ததாக கொட்டுக்காளி படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலரானது நேற்று வெளியான நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சினிமாப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய மிஸ்கின் இந்த படத்தை ஓட வைப்பதற்காக நான் இந்த மேடையில் அம்மணமாக கூட ஆட தயார்.
இந்த படத்தை எடுத்த இயக்குனர் வினோத்ராஜ்க்கு மிகப்பெரிய நன்றி. இந்த படத்தை எடுத்ததற்காக அவனுடைய காலை கூட முத்தமிடுவேன். நான் இளையராஜாவிற்கு பிறகு ஒருவரின் காலை முத்தமிடுவேன் என்றால் அது வினோத் ராஜின் கால்தான். சூரி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். அண்ணா பென்னுக்கு கண்டிப்பாக இந்த வருடம் தேசிய விருது கிடைக்கும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.