CINEMA
“தனுஷ் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம்…” கிராமத்து பெண்ணாக மாறும் மமிதா பைஜு… ‘கர’ படத்தின் சுவாரஸ்ய அப்டேட்…!!
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் கவனம் ஈர்த்த நடிகை மமிதா பைஜு, தற்போது நடிகர் தனுஷுடன் இணைந்து ‘கர’ திரைப்படத்தில் நடித்துள்ளார். தனுஷுடன் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பேசிய அவர், தனுஷை ஒரு “நடிப்பு பல்கலைக்கழகம்” என வியந்து பாராட்டியுள்ளார். அவருடன் இணைந்து நடித்தபோது நடிப்பின் நுணுக்கங்கள் குறித்துப் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகவும், குறிப்பாகத் தன்னுடன் நடிக்கும் பிற கலைஞர்களுக்கும் துணை நடிகர்களுக்கும் அவர் அளிக்கும் ஊக்கமும், சவுகரியமான சூழலும் தரம் வாய்ந்தது என்றும் மமிதா புகழாரம் சூட்டியுள்ளார்.
இத்திரைப்படத்தில் மமிதா பைஜு முதன்முறையாகக் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் தோற்றம் தனக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தியிருப்பதாகவும், ஒரு நடிகையாக இது தனக்குப் புதிய பரிமாணத்தைத் தந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தற்போது விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ள இவர், சூர்யா, விஷ்ணு விஷால் மற்றும் நிவின் பாலி ஆகியோரின் படங்களிலும் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார். வளர்ந்து வரும் இளம் நடிகையான மமிதாவிற்கு, தனுஷ் போன்ற முன்னணி கலைஞர்களுடன் பணியாற்றுவது திரையுலகில் ஒரு சிறந்த கற்றல் வாய்ப்பாக அமைந்துள்ளது.
