CINEMA
ஒரு பேரே வரலாறு…!! “அதை பார்த்து ஷாக் ஆகிட்டேன்…” விஜய் அரசியல் பயணம் பற்றி மனம் திறந்து பேசிய கௌசல்யா…!!
தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை கௌசல்யா, நடிகர் விஜய் குறித்துத் தனது வியப்பைப் பகிர்ந்துள்ளார். விஜய்யுடன் ‘நேருக்கு நேர்’, ‘பிரியமுடன்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த அனுபவம் கொண்ட அவர், விஜய் தற்போது அரசியலுக்குச் சென்றிருந்தாலும் அவரிடம் எவ்வித தலைக்கனமும் இல்லை என்று பாராட்டியுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநரின் சொல்படி நடக்கும் எளிமையான மனிதரான விஜய், இன்றும் அதே நற்பண்புகளுடன் இருப்பதாகவும், அவருக்குப் பின்னால் இருக்கும் மாபெரும் ரசிகர் பட்டாளத்தைப் பார்க்கும்போது தனக்குப் பிரமிப்பாக இருப்பதாகவும் கௌசல்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
இதற்கிடையில், விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் சென்சார் சிக்கலில் சிக்கியுள்ளதால் அதன் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. மதம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சில காட்சிகள் குறித்துத் தணிக்கை வாரியம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், விரைவில் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பரபரப்புகளுக்கு மத்தியில், படத்தின் முக்கியமான 5 நிமிடக் காட்சிகள் மற்றும் பாடல் இணையத்தில் கசிந்திருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் தனது அரசியல் பிரச்சாரத்தின் போது, தனது படத்திற்குத் திட்டமிட்டுச் சிலர் முட்டுக்கட்டை போடுவதாகக் குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது
