LATEST NEWS
42 வயதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை கௌசல்யா…. புதிய சீரியலில் மாஸ் என்ட்ரி…. வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை கௌசல்யா. விஜய், கார்த்தி மற்றும் பிரபுதேவா என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தின் மூலம் கௌசல்யா என்ற பெயரில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் கவிதா என்ற தன்னுடைய பெயரை கௌசல்யா என்று அவர் மாற்றிக் கொண்டார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பலமொழி படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 40 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றார். திருமணம் செய்து கொண்டு கணவன் மற்றும் குழந்தை என குறுகிய வட்டத்திற்குள் வாழ நினைக்கவில்லை எனவும் தற்போது சுதந்திரமாக வாழ்ந்து வருவதாக கௌசல்யா அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வெள்ளித்திரையில் சமீப காலமாக குணச்சித்திர வேதங்களில் நடித்த வரும் கௌசல்யா தற்போது சுந்தரி சீரியலில் நடிக்க உள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் 42 வயதிலும் இன்னும் இளமையுடன் இருக்காங்களே என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
