LATEST NEWS
வாய்ப்பு கேட்டவரை அவமானப்படுத்திய மணிரத்தினம்…..! ஓ அதுக்கு தான் இந்த போட்டியா?…. பிரபலம் சொன்ன தகவல்….!!!
மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. மூன்றாவது நாளான இன்று 230 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ் படம் இவ்வளவு சாதனை படைத்தது இதுவே முதல் முறை. திரைப்படத்தின் நடிகர்கள் அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் 2-வது பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதனிடையே தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் பொன்னியின் செல்வன் வெளியான நாளுக்கு முந்தைய நாள் வெளியானது. இந்த படத்திற்கு எந்த வித ப்ரோமோஷனும் செய்யப்படவில்லை. திடீரென்று செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.
இந்தப் படத்தை கலைப்புயல் எஸ் தானு தயாரித்திருந்தார். இந்த படத்தை ஏன் தற்போது ரிலீஸ் செய்கிறீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் திடீரென்று இப்படத்தை ரிலீஸ் செய்து விட்டனர். இருப்பினும் இந்த திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தது. சில நாட்கள் கழித்து ரிலீஸ் செய்திருந்தால் இன்னும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருந்திருக்கும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தனுஷ் மற்றும் மணிரத்தினம் ஆகியோரை குறித்து தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் மணிரத்தினம் அலுவலகத்திற்கு சென்று வாய்ப்பு கேட்டிருக்கிறார். அப்போது மணிரத்தினம் தனுசை சரியாக கவனிக்கவில்லை. பட வாய்ப்பு குறித்தும் எதுவும் பேசவில்லை. இது தனுஷுக்கு பெரிய அவமானமாக இருந்தது.
ராவணன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தனுஷை அணுகினார் மணிரத்தினம். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதனை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் தனுஷ் போட்டி போட்டு தனது படத்தை வெளியிட்டதாக பலரும் தெரிவித்து வந்த நிலையில் செய்யாறு பாலு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
