LATEST NEWS
“மணிரத்தினம் என்னை பார்த்து அப்படி கேட்டுட்டாரு”…. பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச் மேடையில் சரத்குமார் ஆதங்கம்….!!!
தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கியவர் சரத்குமார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடி பில்டர் ஆகவும் இருப்பவர். இவர் முதன் முதலில் கண் சிமிட்டும் நேரம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம் மற்றும் சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். அந்தத் திரைப்படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தன. இதுவரை 130 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் அதில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், மணிரத்தினம் என்னை பார்த்து ரொமான்ஸ் வருமா என கேட்டுவிட்டார். தான் இரண்டு முறை காதலித்து திருமணம் செய்து கொண்டவன். அவர் என்னைப் பார்த்து இப்படி கேட்டது எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. உலக அழகியை கட்டிப்பிடிக்கும் காட்சியை எனக்கு கொடுத்ததற்கு நன்றி என்று காமெடியாக மேடையில் பேசினார் சரத்குமார்.
