LATEST NEWS
இந்த பெண் யார்..? படுக்கையறையில் சுயநினைவின்றி ஆடைகள் களையப்பட்டு கிடந்த பெண்… அலறிய மணமகள் வீட்டார்… கல்யாணத்திற்கு வந்த பெண்ணிடம் மாப்பிளையே செய்த கொடூரம்… நடுநடுங்கிப்போன சம்பவம்..!!
பென்சில்வேனியாவில் தனது சொந்த திருமண விழாவிற்கு வந்த பெண் விருந்தினர் ஒருவரை, மணமகனே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 அக்டோபர் 17 அன்று கெட்டிஸ்பர்க் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பெண்ணிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அந்தப் பெண் முந்தைய நாள் இரவு 38 வயதான ஜக்காரே ப்ரௌட்டி என்பவரின் திருமணத்தில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், பின்னர் அங்குள்ள ஒரு வீட்டில் தங்க திட்டமிட்டிருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்வு முடிந்த இரவில் மற்ற விருந்தினர்கள் அனைவரும் உறங்கச் சென்ற பிறகு, சோபாவில் அமர்ந்திருந்த அந்த பெண்ணை ப்ரௌட்டி அவரது அனுமதியின்றி முத்தமிட்டுள்ளார். இதனால் அந்த பெண் மற்றொரு அறைக்குச் சென்றபோதும், மணமகன் ப்ரௌட்டி அவரைப் பின்தொடர்ந்து சென்று தகாத முறையில் நடந்துள்ளார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்த அப்பெண், மறுநாள் காலையில் ஒரு அறிமுகமில்லாத படுக்கையறையில் ஆடைகள் களையப்பட்ட நிலையில் கிடந்ததாக தனது வாக்குமூலத்தில் அதிர்ச்சிகரமான தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து முதலில் கருத்து தெரிவிக்க மறுத்த மணமகன் ப்ரௌட்டியிடம் இருந்து காவல்துறையினர் டிஎன்ஏ மாதிரிகளைப் பெற்று சோதனைக்கு அனுப்பினர். அந்தச் சோதனையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியுடன் மணமகனின் டிஎன்ஏ மிகச்சரியாகப் பொருந்திப்போனது உறுதியானது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ப்ரௌட்டி, கடந்த ஜூலை 16 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது 50,000 டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
