LATEST NEWS
“அடச்சீ நீயெல்லாம் அப்பாவா..?” மகிழ்ச்சியாக செல்ஃபி… அடுத்த நொடியே 11 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. கதறி துடிக்கும் தாய்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!
ஆக்ராவில் பைக் தகராறு காரணமாக ஏற்பட்ட தகராறில், தன் 11 மாதக் குழந்தையுடன் மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்த ரிங்கு, இன்னும் மூன்று நாட்களில் பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் அந்தப் பிஞ்சுக் குழந்தையை யமுனை ஆற்றில் வீசியெறிந்ததுடன் தனது மனைவி லட்சுமியையும் ஆற்றில் தள்ள முயன்ற கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; இந்த வெறிச்செயலைக் கண்டு அதிர்ந்துபோன அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டுத் தப்பியோட முயன்ற ரிங்கைச் சம்பவ இடத்திலேயே கையும் களவுமாகப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த அதிர்ச்சி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Father Throws 11-Month-Old Daughter Into Yamuna River | Her Birthday was 3 Days Away
📍 Agra, UP
Rinku first took a selfie with his 11-month-old daughter, then threw her into the Yamuna river. He also attempted to throw his wife Lakshmi into the river. The argument started… pic.twitter.com/H9PjOErPDe— زماں (@Delhiite_) August 14, 2026
ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்கும் பணியில் காவல்துறையினரும் உள்ளூர் நீச்சல் வீரர்களும் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், குடும்பச் சண்டையால் பெற்ற தந்தையே தன் சொந்தக் குழந்தையின் உயிரைப் பறிக்க முயன்ற இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்த மக்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது; மனிதநேயமற்ற இந்தக் கொடூரச் செயலுக்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதுடன், காணாமல் போன குழந்தையை மீட்கும் கோரிக்கையும் வலுத்து வருகிறது.
