LATEST NEWS
விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மலையாளத்து பைங்கிளி… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வெற்றிமாறன்..!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும்பாலான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த சூரியின் முதல் முறையாக விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக அசத்தியிருந்தார்.
இதில் விஜய் சேதுபதியும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் இந்த வருடம் இறுதியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதி முரட்டு சிங்கிளாக காட்டப்பட்ட நிலையில் இரண்டாம் பாகத்தில் வெற்றிமாறன் இவருக்கென ஒரு மலையாள பைங்கிளியை கதாநாயகியாக தேர்வு செய்துள்ளார்.
தற்போது விடுதலை இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், இதில் விஜய் சேதுபதி முழு திரைப்படத்திலும் வரப்போகிறார். ஆனால் இதில் விஜய் சேதுபதிக்கு புதிய ஜோடியை வெற்றிமாறன் சேர்த்துள்ளார். அதாவது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார்.
கதையைக் கேட்டவுடன் அவர் ஒப்புக்கொண்ட நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 44 வயதானாலும் மஞ்சுவாரியாருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாலும் உள்ள நிலையில் தற்போது விஜய் சேதுபதி உடன் அவர் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.