LATEST NEWS
திமுக MLA மார்க்கண்டேயனை சிறையில் அடைக்க உத்தரவு… இரவோடு இரவாக அதிரடி..!!
கடந்த ஜூலை 18 அன்று கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், முதல்வர் விஜய்யின் “எலும்பை உடைப்பேன்” என்று மார்க்கண்டேயன் மிரட்டல் விடுத்ததாகத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ஜூலை 20 அதிகாலையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயனை அவரது இல்லத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்து, 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின் மார்க்கண்டேயன் தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 15 நாள்கள் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
