LATEST NEWS
“எனது கனவு நிஜமானது.. அவரோட பெரிய ரசிகை நான்..” மனம் திறந்து பேசிய தளபதி பட நாயகி..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, மாளவிகா சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் மீனாட்சி சவுத்ரியிடம் தளபதியுடன் இணைந்து நடிக்கும் தருணம் எப்படி இருந்தது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மீனாட்சி, விஜய் சார் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற கனவு நிஜமாகிவிட்டதாக தான் கூற வேண்டும்.
நான் அவரோட மிகப் பெரிய ரசிகை. விஜய் சாருடன் இணைந்து படத்தில் நடிக்கும் ஒவ்வொரு காட்சிகளும் நல்ல அனுபவமாக இருந்தது. அவருடன் இணைந்து நடிக்கும் ஒவ்வொரு காட்சியையும் நான் என்ஜாய் பண்ணி நடிக்கிறேன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
#MeenakshiChaudhary about #ThalapathyVijay and #TheGoat movie #TheGreastestOfAllTimepic.twitter.com/0QhRKNnDs5
— Sekar (@itzSekar) January 18, 2024