LATEST NEWS
வாயை வச்சிட்டு சும்மா இல்லாமல்… எம் ஜி ஆர் -லதா பற்றி அவதூறாக பேசி… மன்னிப்பு கேட்ட கஸ்தூரி…!

தமிழ் சினிமாவில் ஒரு சூடா மன்னராக இருந்தவர் டாக்டர் எம்ஜிஆர். இவரால் 1973ஆம் ஆண்டு உலகம் சுற்றும் வாலிபன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை லதா. இந்த படத்திற்குபின் இவர் எம்ஜிஆர் உடன் பல்வேறு ஜோடியாக படங்களில் நடித்துள்ளார். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த உரிமைகுரல், நினைத்தை முடிப்பவன், நாளை நமதே, மீனவ நண்பன் மற்றும் உழைக்கும் கரங்கள் போன்ற பல படங்கள் வெற்றிகரமாக அமைந்தது.
மேலும் லதா, எம்ஜிஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படத்திலும் ஜோடியாக நடத்துள்ளார். இருப்பினும் இவர் சிவாஜி உடன் சிவகாமியின் செல்வன் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடத்துள்ளார். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடத்துள்ளார். லதா, ரஜினியுடன் ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் கமலுடன் நீயா படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
கடைசியாக தற்பொழுது சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் சரவணா நடிப்பில் வெளிவந்த legend படத்தில் நடித்திருந்தார். மேலும் சித்தி ,வள்ளி, ரோஜா போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கும் இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் சமீபமாக பேட்டியளித்த லதா பல்வேறு சுவையான நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘.நான் பள்ளி பருவ காலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் வைத்து தான் எனக்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
பின்பு நான் எம்ஜிஆர் உடன் பல படங்களில் நடித்துள்ளேன். நானும் சிவாஜியும் நிறைய படங்களில் ஒன்றாக பணியாற்ற வேண்டிஇருந்தது. ஆனால் சிவாஜி உடன் சிவகாமியின் செல்வன் என்ற ஒரு படத்தில் மட்டுமே என்னால் பணியாற்ற முடிந்தது. நான் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருந்தாலும் ஹிந்தியில் வாய்ப்பு வந்த பொழுது நான் அதனை எம்ஜிஆர் உடன் படங்கள் நடிப்பதற்காகவே அது ஏற்க மறுத்தேன் என்று தவறான செய்தி பரவி வந்திருந்தது.
மேலும் கஸ்தூரி என்னையும் எம். ஜி. ஆர். அவர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிரிக்கெட் பால் உடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார். நான் அவரின் வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் என்னை சார்ந்தவர்கள் அதனை எளிதாக விடுவதாக இல்லை. பின்பு சிறிது காலம் கழித்து கஸ்தூரி தன் தவறை உணர்து என்னிடம் வந்து மன்னிப்பு கோரினார். நானும் அவரை மன்னித்து விட்டேன்.
நிறைய யூடியூப் சேனல்கள் தவறான செய்திகளையே பரப்பிக் கொண்டு வருகின்றன. ஆனால் ஒரு சில சேனல்கள் மட்டும் தான் உண்மைகளை கூறி வருகின்றனர். ஏன் இவ்வாறு தவறான செய்திகளை பரப்புகிறார்கள்? என்று தெரியவில்லை’ எனவும் அவர் கூறியிருந்தார். இவரின் இந்த பேட்டியானது வாவ் தமிழா என்ற youtube சேனலில் ஒளிபரப்பப்பட்டது.