LATEST NEWS
ஹரிஷ் ஜெயராஜ் CONCERT -ல் … குஷியாக ஆட்டம் போட்ட… கீர்த்தி சுரேஷ்,கௌதம் வாசுதேவ்மேனன் …!

தமிழ்நாட்டில் அவ்வப்பொழுது முன்னணி இசையமைப்பாளர்களின் இசைக் கச்சேரிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் சமீபத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசை கச்சேரி நடைபெற்றது. ஆனால் இதில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து, மிகுந்த பேசும் பொருளாக மாறியது.
இதனை அடுத்து தற்பொழுது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹரிஸ் ஜெயராஜன் இசைக் கச்சேரி மிகுந்த பாதுகாப்புடனும், எல்லாவித முன்ஏற்பாடுகளுடனும் நடைபெற்றது.மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் இதில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவன் மேனனும் ஹரிஷ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்பொழுது இவ்விருவரும் சேர்ந்து குஷியாக ஆட்டம் போட்டனர்.