LATEST NEWS
“ரூ.32.34 கோடி + ரூ.28.8 கோடி வருவாய்” மணல் அள்ளுவதில் மெகா முறைகேடு’ – சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்களோடு ஊழலை அம்பலப்படுத்திய அமைச்சர் பிரபு..!!
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் பிரபு பேசுகையில், மணல் மற்றும் மண் அள்ளும் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இன்றி மிகப்பெரிய அளவில் கணக்கு முரண்பாடுகள் நிலவுவதாக தவெக அமைச்சர் பிரபு புள்ளிவிவர ஆதாரங்களுடன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கடந்த ஆண்டில் சாதாரண மண் மற்றும் களிமண் விற்பனை வாயிலாக அரசு கருவூலத்திற்கு ரூ.32.34 கோடி வருவாயும், கூடுதலாக ரூ.28.8 கோடியும் கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், அரசின் அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் வெறும் 60 லட்சம் மெட்ரிக் டன் கனிமம் மட்டுமே வெட்டி எடுக்கப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளதை அவர் அம்பலப்படுத்தினார்.
உண்மையில் அரசு கட்டுமானத் திட்டங்களுக்கு மட்டுமே சுமார் 3.6 கோடி மெட்ரிக் டன் மண் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் தேவைக்காக 6 கோடி மெட்ரிக் டனுக்கும் அதிகமான மண் அள்ளப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மெட்ரிக் டன் மண் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் போது, ஆவணங்களில் வெறும் 60 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே பதிவாகியிருப்பது சட்டவிரோதக் கையாடலையும், அரசுக்கு ஏற்பட்டுள்ள பல கோடி ரூபாய் வருவாய் இழப்பையும் அப்பட்டமாகக் காட்டுவதாக அவர் சாடினார்.
