LATEST NEWS
“இது எவ்ளோ பெரிய ஓட்டை.. நானும் தலைய பிச்சிக்கிட்டு இருக்கேன்..!” கனிமவளக் கொள்ளை குறித்து எதிர்க்கட்சிகள் குண்டை தூக்கிப் போட்டதும்.. அமைச்சர் பிரபு கொடுத்த மரண மாஸ் பதில்..!!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் கனிமவளக் கணக்குகள் மற்றும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த கனிமவளத் துறை அமைச்சர் பிரபு, ஒரு மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை வெளியிட்டார். அரசுப் பதிவுகளின்படி அதிகாரப்பூர்வமாகக் கணக்கில் வந்தது வெறும் 60 லட்சம் மெட்ரிக் டன் கனிமவளம் மட்டும்தான் என்று சுட்டிக்காட்டிய அவர், ஆனால் கள நிலவரப்படி உண்மையில் எடுக்கப்பட்டதோ மொத்தம் 6 கோடி மெட்ரிக் டன் என்ற பிரம்மாண்ட அளவில் உள்ளது என்று ஒப்புக்கொண்டார். இவ்வளவு பெரிய கனிமவளக் கொள்ளை மற்றும் முறைகேடுகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பது குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
இந்த இரண்டு புள்ளிவிவரங்களுக்கும் இடையே இருக்கும் அதீத இடைவெளியைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் பிரபு, “இது எவ்ளோ பெரிய ஓட்டை, இதை என்ன பண்றதுனே தெரியாம நானும் தலைய பிச்சிக்கிட்டு இருக்கேன்” என்று அவையிலேயே மிகவும் எதார்த்தமாகவும் ட்விஸ்டாகவும் பதில் அளித்தார். களத்தில் வெட்டி எடுக்கப்பட்ட பெரும் பகுதி கனிமவளம் அதிகாரப்பூர்வ கணக்கிற்கு வராமல் போனது, சினிமாவில் வரும் “கிணத்தைக் காணோம்” நகைச்சுவை பாணியில் உள்ளதாக விவரித்த அவரது இந்த அனல் பறக்கும் பேச்சு பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது.
