“இது நீ துள்ளிக்குதித்து விளையாடுற வயசுதான், ஆனா..!” சபாநாயகர் எச்சரித்த அடுத்த நொடியே ஏ.வ.வேலுவின் அனல் பறக்கும் விவாதம்.. கோட்டையில் அரங்கேறிய மாஸ் ஆக்ஷன்!..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது நீ துள்ளிக்குதித்து விளையாடுற வயசுதான், ஆனா..!” சபாநாயகர் எச்சரித்த அடுத்த நொடியே ஏ.வ.வேலுவின் அனல் பறக்கும் விவாதம்.. கோட்டையில் அரங்கேறிய மாஸ் ஆக்ஷன்!..!!

Published

on

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அடிக்கடி ஏற்படும் கடுமையான வாக்குவாதங்கள் மற்றும் அநாகரிகமான மோதல் போக்குகள் குறித்துத் திமுக மூத்த உறுப்பினர் எ.வ.வேலு அவையில் தனது வருத்தத்தையும் புலம்பலையும் பதிவு செய்துள்ளார். அவையின் மாண்பைக் கெடுக்கும் வகையில் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் இளம் உறுப்பினர்களை நோக்கி, “உங்களுக்கு துள்ளிகுதிக்கிற வயசுதான், ஆனா ஓடுகிற மாட்டுக்கு மூக்கணாம் கயிறு போட்டுதான் ஆகணும்” என்று எ.வ.வேலு மிகக் காட்டமாக அறிவுரை வழங்கியுள்ளார். சட்டமன்றத்தை நெறிப்படுத்தவும், அதன் கண்ணியத்தை நிலைநாட்டவும் இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை மாட்டுக்கு மூக்கணாம் கயிறு போடும் பழமொழியோடு ஒப்பிட்டு அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டமன்றம் எவ்வளவு கட்டுக்கோப்பாகவும், திட்டமிட்டபடியும் நடந்தது என்பதை இந்த விவாதத்தின் போது எ.வ.வேலு நினைவுகூர்ந்தார். “ஜெயலலிதா அம்மையார் சட்டமன்றத்தில் இருக்கும்போது மாலை 4 மணிக்கெல்லாம் விவாதங்களை முடித்துவிட்டு நாங்கள் அனைவரும் கிளம்பிவிடுவோம்” என்று குறிப்பிட்ட அவர், அன்றைய காலகட்டத்தில் அவையில் நிலவிய நேர மேலாண்மையையும், ஒழுக்கத்தையும் தற்போதைய சூழலோடு ஒப்பிட்டுப் பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in