LATEST NEWS
“பதட்டம் ஆகாதீங்க ஐயா” மலையையும், ஜி-ஸ்குவேரையும் பத்தி பேசினா ஆஸ்டின் ஏன் துள்ளிக் குதிக்கிறாரு..? சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பகிரங்க பேச்சு..!
“பதற்றம் ஆகாதீங்க.. திமுக பதற்றம் ஆகாதீங்க..” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் திமுகவினரைப் பார்த்து மிகக் காட்டமாக வாரிப் பேசியுள்ளார். டாஸ்மாக்கை மூடச் சொல்லும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதன் பின்னணியில் இருக்கும் மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள் யார் என்பதை முதலில் அவையில் வெளிப்படையாகக் கூற வேண்டும் என்று அவர் சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பினாமி பெயர்களில் மணல் குவாரிகள் மற்றும் கல்குவாரிகள் தமிழகத்தில் தற்போதும் நடத்தப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். இயற்கையான மலையை உடைப்பது மற்றும் G-SQUARE நிறுவனம் குறித்துப் பேசினால் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் ஏன் பதறியடித்துக் கொண்டு எழுகிறார்? என்று அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி திமுக வரிசையை நிலைகுலையச் செய்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போதே, திமுக உறுப்பினர் ஆஸ்டின் தனது இருக்கையை விட்டு எழுந்து அவையில் கடுமையான முறையில் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். திமுகவினரின் இந்தத் தொடர் குறுக்கீடுகளையும் எதிர்ப்புகளையும் பார்த்து சற்றும் அசராத தவெக அமைச்சர், “பதற்றம் ஆகாதீங்க.. திமுக பதற்றம் ஆகாதீங்க” என்று திரும்பத் திரும்பக் கூறி அவையிலேயே அவர்களுக்குப் பளீச்செனப் பதிலடி கொடுத்தார்.
