LATEST NEWS
“என் பின்னாடி முதலமைச்சர் இருக்கார்.” அறநிலையத்துறையிலும் ஆட்டம் காட்டிய ஜோதிடர்.? முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்தி அதிகாரம் செய்ய முயன்றதாக உளவுத்துறை ரிப்போர்ட்.. செம கடுப்பில் விஜய்..!!
முதலமைச்சரின் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜோதிடர் ராதன் பண்டிட், தொடர்ந்து எழுந்த பல்வேறு நிர்வாக எதிர்ப்புகள் மற்றும் அரசியல் சர்ச்சைகளைத் தொடர்ந்து அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் முக்கிய இடங்களில் துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளே இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்ததைத் தொடர்ந்து, அரசியல் விமர்சனங்களைத் தவிர்க்கும் வகையில் அவர் இந்து சமய அறநிலையத்துறையின் சிறப்பு அதிகாரியாக அதிரடியாக மாற்றப்பட்டார். ஆன்மீகம் மற்றும் கோவில் விவகாரங்களில் அவரது அனுபவம் பயன்படும் என்றும், இதனால் சர்ச்சைகள் முடிவுக்கு வரும் என்றும் அப்போது எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், புதியதாக மாற்றப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையிலும் அவரது தலையீடு நாளுக்கு நாள் அதிகரித்ததாக தற்போது அடுக்கடுக்கான புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துறையின் தினசரி நிர்வாகப் பணிகள், முக்கியக் கோவில்கள் தொடர்பான முடிவுகள் மற்றும் நிதி விவகாரங்களில் அவர் தேவையின்றி தலையிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், முதலமைச்சரின் நேரடி ஆதரவு மற்றும் செல்வாக்கு தனக்கு இருப்பதாகக் கூறி, அரசு விதிகளுக்குப் புறம்பாகச் சில முடிவுகளை எடுக்குமாறு அங்கிருக்கும் உயர் அதிகாரிகளை அவர் வற்புறுத்தியதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன.
முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தித் துறை ரீதியாகத் தேவையற்ற அதிகாரம் செலுத்த முயன்றதாகக் கூறப்படும் இந்த விவகாரம், தற்போது அரசு மற்றும் கட்சித் தலைமைக்கு அதிகாரப்பூர்வமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்துப் பல்வேறு துறைகளிலும் ஜோதிடர் ராதன் பண்டிட் மீது எழுந்து வரும் இந்தத் தொடர் ஆக்கிரமிப்புப் புகார்கள் மற்றும் முறைகேட்டுச் சர்ச்சைகள், தமிழக அரசியல் வட்டாரத்திலும் தலைமைச் செயலக வட்டாரத்திலும் தற்போதைய மிகப்பெரிய ஹாட் டாபிக்காக வெடித்துள்ளது.
