LATEST NEWS
இருங்க அண்ணி.! 5 நிமிஷத்துல எப்படி முடிக்க முடியும்? பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமாரின் பேச்சால் விழுந்து விழுந்து சிரித்த சௌமியா அன்புமணி…!!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் நீண்ட நேரம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து பல முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்ததால், அவையின் நேரத்தைக் கருத்தில் கொண்டு பேச்சை விரைவில் நிறைவு செய்யுமாறு துணை சபாநாயகர் அவரைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டார்.
துணை சபாநாயகர் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அவையிலிருந்த பாமக சட்டமன்றக் குழுத் தலைவரான சௌமியா அன்புமணி குறுக்கிட்டு, கணேஷ்குமாரைப் பார்த்து “இன்னும் ஒரு 5 நிமிடத்தில் உங்களது பேச்சை முடித்துக் கொள்ளுங்கள்” என்று சைகை காட்டித் தெரிவித்தார். அதற்குச் சற்றும் யோசிக்காமல், “இருங்க அண்ணி… இன்னும் நிறைய விஷயங்கள் பேச வேண்டியிருக்கு, இவ்வளவு பெரிய விவகாரங்களை வெறும் 5 நிமிடத்தில் எப்படி முடிக்க முடியும்?” என்று கணேஷ்குமார் அவையிலேயே எதார்த்தமாகப் பதிலளித்தார்.
சட்டமன்ற மரபுகளைத் தாண்டி குடும்ப உறவுமுறையோடு “அண்ணி” என்று அவர் சட்டென அழைத்த வினோதமான பதிலைக் கேட்டு, சௌமியா அன்புமணி தனது முகத்தைக் கைகளால் மறைத்தபடி மேடையிலேயே விழுந்து விழுந்து சிரித்தார். கணேஷ்குமாரின் இந்த எதார்த்தமான பேச்சினாலும், சௌமியா அன்புமணியின் கலகலப்பான ரியாக்ஷனாலும் அவையில் இருந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் சிரித்ததால், சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் மிகப்பெரிய சிரிப்பலை ஏற்பட்டு அரங்கம் கலகலப்பானது.
