CINEMA
மேடை பேச்சால் ட்ரோல்கள்… நண்பர்கள் திட்டுறாங்க…. வேதனை தெரிவித்த மிஷ்கின்…!!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் மனைவி திவ்யா தயாரிக்கிறார்.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், நேற்று வாழை திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த மேடையில் தான் நாகரீகமாக நடந்துருக்கேன். அதனால் ரொம்ப வருத்தத்தோடும், மகிழ்ச்சியோடும் மேடையில் இருந்து இறங்குறேன். என்னுடைய வீடியோக்களை அனுப்பி நண்பர்களே திட்டுறார்கள் என்று கூறியுள்ளார்.