CINEMA
எனக்கெல்லாம் ஹேட்டர்ஸ் இருக்காங்களா…2 நிமிடத்தில் வைரலான போஸ்ட்…கோபமும் இல்லை.. எமோஷனலும் இல்லை.. ஒரு சின்ன புன்னகையால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தென்னிந்திய குயின்…!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா ரூத் பிரபு, அடுத்ததாகத் தனது சொந்த தயாரிப்பில் உருவாகும் ‘மா இன்டி பங்காரம்’ (Maa Inti Bangaram) திரைப்படம் மூலம் மீண்டும் திரையில் தடம் பதிக்கத் தயாராகி வருகிறார். சமீபகாலமாகச் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் அவர், அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் ‘கேள்வி-பதில்’ செஷன் ஒன்றை நடத்தினார். அப்போது தனது புதிய படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்ட சமந்தா, இப்படத்தின் கதைக்குத் தான் முதலில் நடிகை சாய் பல்லவியைத் தான் தேர்வு செய்திருந்ததாகக் கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த செஷனில் தன்னைத் தொடர்ந்து விமர்சிப்பவர்கள் மற்றும் வெறுப்பவர்கள் (ஹேட்டர்ஸ்) குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குச் சமந்தா கொடுத்த கூலான பதிலடி தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. “உங்களை வெறுப்பவர்களை ஒரே வார்த்தையில் எப்படி விவரிப்பீர்கள்?” என்று அந்த ரசிகர் கேட்டிருந்தார். இதற்குச் சமந்தா சற்றும் கோபப்படாமலோ அல்லது எமோஷனல் ஆகாமலோ, தனது டிரேட்மார்க் புன்னகையுடன் மிகவும் எதார்த்தமாகப் பதிலளித்தார்.
“ஹேட்டர்ஸ்-ஆ? யாருடைய ஹேட்டர்ஸ்? எனக்கெல்லாம் ஹேட்டர்ஸ் இருக்கிறார்களா என்ன?” என்று அவர் ஜாலியாகத் திருப்பிக் கேட்டார். தன்னைச் சுற்றி நெகட்டிவிட்டியைப் பரப்புபவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், அவர்களைத் தன் பாசிட்டிவான அணுகுமுறையால் சமந்தா டீல் செய்த விதம் அவரது ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளது. எந்தவொரு எதிர்மறை விமர்சனங்களையும் அசால்ட்டாகக் கடந்து செல்லும் சமந்தாவின் இந்த ‘கூல்’ குணம் தான் அவரை என்றும் தென்னிந்திய சினிமாவின் குயினாக வைத்திருக்கிறது என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
