LATEST NEWS
அட இவங்களா?…. இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய முக்கிய போட்டியாளர்கள்…. வெளியானது இன்றைய ப்ரோமோ….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முதலில் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட கடந்த வாரம் 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். ஒவ்வொரு வாரமும் புது புது டாஸ்க் கொடுத்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் நன்றாக போட்டிகளை விளையாடி வருகிறார்கள்.
இதனிடையே இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அந்த இரண்டு பேர் யார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் போட்டியாளர் ராம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் அவரைத் தொடர்ந்து நேற்று ஆயிஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்றைக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்று உள்ளது. அதில் முக்கிய போட்டியாளர்களின் பெயரிடம் பெற்றுள்ளதால் இந்த வாரம் கட்டாயம் மக்களுக்கு விருப்பமான போட்டியாளர் ஒருவர் வெளியேறுவார் என்பது உறுதியாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.