LATEST NEWS
கதறி அழுத பாக்கியலட்சுமி சீரியல் நடிகை…. கையில் இருந்த குழந்தை கொடுத்த கியூட் ரியாக்ஷன்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்பத் தலைவியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் இதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. கதாநாயகி சுசித்ராவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை கொண்டவர்.
தினம்தோறும் புதுவிதமான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் மகன் எழிலின் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அவர் காதலித்த அமிர்தா தனது குழந்தையுடன் மண்டபத்திற்கு வந்துள்ளார். இதனை அறிந்த ஈஸ்வரி அவரை வெளியே அனுப்பி சத்தம் போட்டு விரட்டியுள்ளார்.
அப்போது அமிர்தா கையில் குழந்தையை வைத்து அழுதுள்ளார். அந்த சமயத்தில் குழந்தை நட்சத்திரம் உண்மையாகவே அழுகிறார் என்று நினைத்து அவரின் கண்ணீரை துடைத்து விட்டதுடன் அவருக்கு முத்தம் கொடுத்து சமாதானப்படுத்தி உள்ளது. அந்த க்யூட்டான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் கொள்ளை கொண்டுள்ளது.