நானே வருவேன்….! அடம் பிடித்து வந்தேன்….! சூசகமாக கலாய்த்த பார்த்திபன்….. வேற லெவல் தான்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நானே வருவேன்….! அடம் பிடித்து வந்தேன்….! சூசகமாக கலாய்த்த பார்த்திபன்….. வேற லெவல் தான்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்ப காலகட்டத்தில் பல அவமானங்களை சந்தித்தாலும் தற்போது பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார் . சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று நானே வருவேன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இன்று பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதால் இந்த திரைப்படத்தின் தேதியை சற்று தள்ளி வைத்திருக்கலாம் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தாணு சொன்ன தேதியில் தான் ரிலீஸ் செய்தேன் என்று உறுதியாக நின்று நேற்று இந்த படத்தை ரிலீஸ் செய்தார்.

Advertisement

பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கான சிறப்பு பத்திரிகை கூட்டம் நடைபெற்றது. அதில் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டனர். பார்த்திபனும் இதில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேச ஆரம்பித்தவுடன் நானே வருவேன் என கூறி சிறிது நேரம் கழித்து இன்று நானே வருவேன் என்று அடம்பிடித்து நானே வந்தேன் என்று தனக்கான பாணியில் தனுஷ் படத்தை வச்சு செய்தார்.

இந்த பேச்சை கேட்டதும் பலரும் சிரித்தனர். பின்னர் பேசிய பார்த்திபன் நான் இன்று தஞ்சாவூர் போக வேண்டி இருந்தது. அதனால் வரமுடியவில்லை என கூறினேன். அதான் இப்போது நானே வருவேன் என்று சொல்லி மலுப்பினார். இதை பார்த்த பலரும் நீங்கள் படத்தை தான் விமர்சனம் செய்துள்ளீர்கள் என்று கூறி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in