LATEST NEWS
பாவம் கணேசன் சீரியலில்… தங்கையாக நடித்த நடிகை…. ஷிமோனாவின் திருமண புகைப்படங்கள்…!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் எண்ணிக்கை ஏராளமாகும். இதில் சரவணன் மீனாட்சி, கனா காணும் காலங்கள் போன்ற ஒரு சில சீரியல்கள் மட்டுமே கடைசி வரை ஒளிபரப்ப பட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன. ஆனால் இதில் பல வந்த சுவடு தெரியாமல் பாதிலேயே நிறுத்தப்பட்டன.
மேலும் சீரியல்களின் கதைஅமைப்பை தாண்டி ஒரு சில கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. இந்தவகையில் மக்களால் வரவேற்கப்பட்ட சீரியல் பாவம் கணேசன் ஆகும். இந்த சீரியலில் kpy நிகழ்ச்சி போட்டியாளர் நவீன் நடித்திருந்தார். இந்த சீரியல் கடந்த 2021ல் ஒளிபரப்பாகி நிறைவு பெற்றது.
இந்த சீரியலில் கணேசனின் மூத்த தங்கையாக நடித்தவர் ஷிமோனா. மேலும் இவர் பாவம்கணேசனை தொடர்ந்து வேறு எந்த சீரியலிலும் நடக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஷிமோனாவிற்கு கோயம்புத்தூரில் கிரண் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.