LATEST NEWS
பயங்கரம்..! ஜாமீனில் வந்த வாலிபரை ஸ்கூட்டரிலிருந்து தள்ளிவிட்டு ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்த கொடூரக் கும்பல்… நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி..!!
புது டெல்லியின் காலிந்தி குஞ்ச் பகுதியில், 23 வயதான ஷாஹித் ஹுசைன் என்ற வாலிபர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பலால் வழிமறிக்கப்பட்டு ஓட ஓட விரட்டிக் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீராம் சௌக் பகுதியில் அரங்கேறிய இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காலிந்தி குஞ்ச் காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி கரன், அபுஜார், மோனு மாலிக் மற்றும் கௌரவ் ஆகிய நான்கு பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ஜாமியா நகரைச் சேர்ந்த இந்த வாலிபர் அண்மையில்தான் சிறையிலிருந்து விடுதலையானார் என்பதும், 2025-ஆம் ஆண்டு திஹார் சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பழைய முன்விரோதமே இந்த படுகொலைக்குக் காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முக்கியக் குற்றவாளியான தருண் என்ற ரஞ்சன், அமன் மற்றும் ராஜா ஆகிய மேலும் மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைக் கைது செய்யவும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்யவும் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
